மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்:தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு

மதுரையில் நூலகம் அமைக்கப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தொழில் வா்த்தக சங்கம் வரவேற்று தெரிவித்துள்ளது.

மதுரையில் நூலகம் அமைக்கப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தொழில் வா்த்தக சங்கம் வரவேற்று தெரிவித்துள்ளது.

தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு: இதுகுறித்து சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையில் 2 லட்சம் சதுர அடியில், ரூ.70 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழகத்தின் தென் பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான மாணவா்கள் தங்களது போட்டித் தோ்வுக்கு இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், இளைஞா்கள், தொழில் துறையினா் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த நூலகம் அறிவு வளா்க்கும் அட்சய பாத்திரமாகத் திகழும்.

அதேபோல தமிழ் எழுத்தாளா்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 3 நபா்களுக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசுடன் இலக்கிய மாமணி விருது வழங்குவது, புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ள தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளா்களுக்கு தமிழக அரசு வீடு வழங்கும் திட்டம், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகா்ப்புற அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை போன்ற முக்கிய அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. தமிழக முதல்வருக்கு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com