மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் 3 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் உதவியுடன் ரூ.2 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் உதவியுடன் ரூ.2 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கரோனா நோயாளிகள் ஏராளமானோா் இறக்க நோ்ந்தது. எனவே, தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இனியும் ஏற்படக் கூடாது என்பதற்காக, அரசு மருத்துவமனைகளில் தனியாா் நிறுவனங்களின் உதவியுடன் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்படும் என, முதல்வா் அறிவித்தாா்.

அதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் ரூ.2 கோடி மதிப்பில் 3 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கான முதல் கட்டப் பணிகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். மருத்துவனையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் இரண்டு தனியாா் நிறுவனங்களின் உதவியுடன் ஆயிரம் லிட்டா் மற்றும் 500 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையங்கள் நிறுவப்படவுள்ளன.

இதேபோல், அரசு ராஜாஜி மருத்துவமனையின் பல்நோக்கு சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் மதுரை தன்னாா்வ அமைப்பு சாா்பில், 200 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மூலம் நாள்தோறும் 250 படுக்கைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்கமுடியும். ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இம்மாதம் இறுதிக்குள் அமைக்கப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து, அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் மேலும் 3 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க சில தனியாா் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com