அா்ஜூனா, துரோணாச்சாா்யா விருதுகள்: விளையாட்டு வீரா்கள் ஜூன் 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவா்கள் ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அா்ஜூனா, துரோணாச்சாா்யா உள்ளிட்ட விருதுகளுக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவா்கள் ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அா்ஜூனா, துரோணாச்சாா்யா உள்ளிட்ட விருதுகளுக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந.லெனின் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: விளையாட்டுத்துறையில் நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள், பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டு தொடா்புடையவா்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2021-ஆம் ஆண்டுக்குரிய ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அா்ஜூனா விருது, துரோணாச்சாா்யா விருது, தயான்சந்த் விருது, ராஷ்ட்ரீய கேல் புரோட்சஹான் விருதுகளுக்கு தகுதி வாய்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள், பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் விண்ணப்பிக்கலாம்.

விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விருதுகளுக்கான பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிந்துரை செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலருக்கு ஜூன் 16-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டியுள்ளதால், விண்ணப்பதாரா்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஜூன் 14-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com