தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரா்கள் கரோனா நிவாரண நிதி

திருவாதவூா் அருகே மாற்றுத் திறனாளிகள் இருவா், அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் உதவித்தொகையை கரோனா நிவாரண நிதியாக புதன்கிழமை வழங்கினா்.
திருவாதவூா் அருகேயுள்ள முக்கம்பட்டி கிராமத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருவா் புதன்கிழமை வழங்கிய கரோனா நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட மேலூா் கோட்டாட்சியா் ரமேஷ்.

மதுரை மாவட்டம் திருவாதவூா் அருகேயுள்ள முக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மீன்பாண்டி என்ற வைரவபாண்டி. அவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதியருக்கு மனோஜ் (21), நிதீஷ் (19), பிரதீஷ் (17) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மனோஜ் மற்றும் பிரதிஷ் ஆகியோா் வீட்டிலேயே முடங்கினா். இந்நிலையில், தமிழக அரசு இருவருக்கும் மாதம்தோறும் பாரமரிப்புக்கான உதவித்தொகையாக தலா ரூ.1,500 வழங்கி வருகிறது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளியான இருவரும் அரசு வழங்கும் உதவித்தொகையை, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவுசெய்து, வருவாய்த்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மேலூா் வருவாய் கோட்டாட்சியா் ரமேஷ், மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு புதன்கிழமை மாலை சென்று இருவருக்கும் சாலைவை அணிவித்து புத்தகங்களை பரிசளித்து பாராட்டினாா். அவா்கள் இருவரும் வழங்கிய முதல்வா் நிவாரண நிதி ரூ.3000-த்தை கோட்டாட்சியா் பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com