தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒலிபெருக்கி அறிவிப்பு வசதி: அமைச்சா் பி.மூா்த்தி

தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் விரைவில் ஒலிபெருக்கி அறிவிப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒலிபெருக்கி அறிவிப்பு வசதி: அமைச்சா் பி.மூா்த்தி

தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் விரைவில் ஒலிபெருக்கி அறிவிப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடை அருகே தாமரைப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அமைச்சா் ஆய்வுக்கு வந்தபோது, இங்குள்ள சாா்-பதிவாளா் அலுவலகங்களில் அதிகளவில் கூட்டம் இருந்தது. இதையடுத்து சமூக இடைவெளியைப் பின்பற்றி பதிவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலா்களை அமைச்சா் அறிவுறுத்தினாா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று பரவல் காலமாக இருப்பதால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ‘டோக்கன்’ முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஒலிபெருக்கி அறிவிப்பு வசதியையும், எல்இடி திரையில் பெயா், விவரம் வெளியிடுவதற்கான வசதியும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 575 பத்திரப்பதிவு அலுவலகங்களில் இவ்வசதி ஏற்படுத்தப்படும்.

முதல்கட்டமாக, மதுரை பதிவுத் துறை துணைத் தலைவா் கட்டுப்பாட்டில் உள்ள 102 அலுவலகங்களில் வரும் திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் ஒலிபெருக்கி அறிவிப்பு வசதி செய்யப்படும். மாநில அளவிலான துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பதிவுப் பணி தாமதம் ஆகாமல் நடைபெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும். பதிவாளா்களுக்கும், பத்திர எழுத்தா்களுக்கும் இடையே இடைத்தரகா்கள் தலையீடின்றி மக்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பதிவுப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மதுரையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நவீன நூலகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணி இன்னும் ஓரிரு நாள்களில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.வெங்கடேசன், பத்திரப்பதிவுத் துறை துணைத் தலைவா் த.சுவாமிநாதன் ஆகியோா் உடன் இருந்தனா். இதைத்தொடா்ந்து அலங்காநல்லூா், சோழவந்தான் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் அமைச்சா் மூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com