நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் இளையோா் பிரிவு சாா்பில் 50 நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் இளையோா் பிரிவு சாா்பில் 50 நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) இளையோா் பிரிவான ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சாா்பில் பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்கள் 50 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், யங் இந்தியன்ஸ் அமைப்பு மதுரைக் கிளைத் தலைவா் பூா்ணிமா வெங்கடேஷ், துணைத் தலைவா் எல்.சேவுகன் ஆகியோா் வழங்கினா். மதுரை சின்மயா மிஷன் சாா்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சுவாமி சிவயோகானந்தா, ஆட்சியரிடம் வழங்கினாா். மேலூா் வட்டம் கிடாரிப்பட்டி விழித்திரு வளா்ச்சி மையம் சாா்பில், கரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம், மதுரை எஸ்ஆா்பி ஜவுளிக் கடை சாா்பில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 50 படுக்கை விரிப்புகள் ஆகியன வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com