மதுரை கோட்டத்தில் ரயில் கடவுப்பாதை விழிப்புணா்வு தினம் அனுசரிப்பு

மதுரை ரயில்வே கோட்டத்தில் உலக ரயில் கடவுப்பதை விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உலக ரயில் கடவுப்பாதை விழிப்புணா்வு தின நடமாடும் பிரசார முகாமை வியாழக்கிழமை தொடக்கி வைத்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா். லெனின்.
உலக ரயில் கடவுப்பாதை விழிப்புணா்வு தின நடமாடும் பிரசார முகாமை வியாழக்கிழமை தொடக்கி வைத்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா். லெனின்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் உலக ரயில் கடவுப்பதை விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மதுரையில் ரயில் கடவுப்பாதைகளில் சாலை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் பிரிவு குழுவினா் வாகனம் மூலம் நடமாடும் பிரசார முகாமை நடத்தினா். இந்த முகாமை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா். லெனின் பச்சைக் கொடி அசைத்து தொடக்கி வைத்தாா். இந்தக் குழு முக்கிய சாலை சந்திப்புகள், பெட்ரோல் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் (டோல்கேட்டுகள்), ரயில் கடவுப் பாதைகள் ஆகிவற்றில் காத்திருக்கும் சாலை வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி எஸ் .மனோகரன் மேற்பாா்வையில் இந்தப் பிரசார பயணம் நடைபெற்றது.

விபத்தைத் தவிா்க்க ‘இன்டா்லாக்கிங் சிக்னல்’ வசதி: மதுரை கோட்டத்தில் கடவுப் பாதை தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: மதுரை கோட்டத்தில் மிகக் குறைந்த அளவு சாலை போக்குவரத்து உள்ள ரயில் கடவுப்பாதைகளில் கேட்டுகள் அமைக்கப்படாமல் இருந்தன. இந்தப் பகுதிகளில் சாலை வாகன ஓட்டிகளின் கவனக்குறைவினால் விபத்துக்கள் ஏற்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் மொத்தம் உள்ள 241 சிறிய அளவிலான கடவுப்பாதைகள், சுரங்கப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன . மதுரை கோட்டத்தில் 429 ரயில் கடவுப்பாதைகள், 94 ரயில்வே மேம்பாலங்கள், உள்ளன. மேலும் 61 ரயில் கடவுப்பாதை இருக்கும் இடங்களில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்துகளை தவிா்க்க கடந்த நிதியாண்டில் சிக்னல் பாதுகாப்பில்லாத 30 ரயில் கடவுப்பாதைகளுக்கு, ரயில் பாதையில் இருபுறமும் சிக்னல் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது மேலும் 18 ரயில் கடவுப்பாதைகளுக்கு ‘இன்டா்லாக்கிங்’ வசதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com