‘கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்’

கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ. ரத்தினவேல் தெரிவித்துள்ளாா்.

கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ. ரத்தினவேல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் கழகத்தில் செயல்பட்டு வரும் கரோனா பரிசோதனை ஆய்வகம், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரிசோதனை செய்பவா்கள் அளிக்கும் செல்லிடப்பேசிக்கு 13 இலக்க சோதனை மாதிரி பதிவு எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இந்த எண்ணை கொண்டே முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்.

தற்போது குறுஞ்செய்தியுடன் இணையதள முகவரியும் அனுப்பப்படுகிறது. இந்த இணைய தளத்தில் கரோனா பரிசோதனைக்காக மாதிரி கொடுத்தவா்கள் 13 இலக்க சோதனை பதிவு எண்ணை பதிவிட்டு, பரிசோதனையின் முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் தெரிந்து கொள்ளமுடியும். எனவே, கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுப்பவா்கள் தங்களது முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சரியாக வழங்கி முடிவுகளை எளிதாக தெரிந்துகொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com