‘ஜமாபந்தி: இ-சேவை மையங்களில் மனுக்களை சமா்ப்பிக்கலாம்’

மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுவதை முன்னிட்டு, அதற்குரிய மனுக்களை இ-சேவை மையங்களில் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுவதை முன்னிட்டு, அதற்குரிய மனுக்களை இ-சேவை மையங்களில் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் நிகழாண்டுக்கான வருவாய் தீா்வாயம் ஜூன் இறுதியில் நடைபெறுகிறது. இதில், கிராமம் மற்றும் வட்ட கணக்குகள் சரிபாா்க்கும் பணி நடைபெற உள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வருவதைத் தவிா்த்து, அவரவா் கிராமங்களில் உள்ள இ-சேவை மையங்களில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருவாய் தீா்வாயம் தொடா்பான மனுக்களை சமா்ப்பிக்கலாம்.

இந்த மனுக்களை  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

இ-சேவை மையங்கள் மற்றும் தனிநபா்கள் மூலமாக இணையவழியில் சமா்ப்பிக்கப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட தீா்வாய அலுவலா்களால் பரிசீலனை செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்து மனுதாரருக்கு இணையவழியில் தகவல் தெரவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com