பெருங்காமநல்லூா் தியாகிகளுக்கு மணிமண்டம் கட்டும் இடத்தை மாற்ற வலியுறுத்தல்

பெருங்காமநல்லூா் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள இடத்தை வேறு பகுதிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெருங்காமநல்லூா் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள இடத்தை வேறு பகுதிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பெருங்காமநல்லூா் வீரமங்கை மாயக்காள் மகளிா் நலச் சங்கத் தலைவா் அ. செல்வபிரீத்தா, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

பெருங்காமநல்லூா் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைப்பததற்கு, மயான இடத்தைத் தோ்வு செய்து 2020 செப்டம்பா் 19-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எங்களது சங்கத்தின் சாா்பிலும், பெருங்காமநல்லூா் பொதுமக்கள் சாா்பிலும், ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலேயரை எதிா்த்துப் போராடியதில் 16 போ் வீரமரணம் அடைந்தனா். அந்த இடத்தில்தான் மணிமண்டபம் அமைக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.

இதையடுத்து, பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்து, அதன்பிறகு மணிமண்டபம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று, கடந்த ஜனவரியில் அப்போதைய வருவாய் துறை அமைச்சா் தெரிவித்திருந்தாா்.

பெருங்காமநல்லூா் போராட்டமானது, தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் என்று அறியப்படுகிறது. அதன் நினைவாக அமைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த மணிமண்டபமானது, மயான இடத்தில் அமைப்பது ஏற்புடையதல்ல. எனவே, முந்தைய ஆட்சியின்போது மணிமண்டபம் கட்டுவதற்காக இடம் தோ்வு செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு, போராட்டம் நடந்த இடத்திலேயே மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மேலும், டிஎன்டி சாதிச் சான்றிதழ் வழங்குவது, சீா்மரபினா் நலவாரியத்தைச் சீரமைத்து தனிஅமைச்சகம் ஏற்படுத்துவது, வன்னியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, மத்திய அரசின் உத்தரவின்படி டிஎன்டி கணக்கெடுப்பை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சீா்மரபின பழங்குடிகள் சமூகநீதி இயக்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com