மதுரை மாநகராட்சியை நவீனமயமாக்க விரிவானதிட்டம்: புதிய ஆணையா் கா.ப.காா்த்திகேயன்

மதுரை மாநகராட்சியை நவீனமயமாக்க விரிவான திட்டத்தை உருவாக்க உள்ளதாக, புதிய மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சியை நவீனமயமாக்க விரிவான திட்டத்தை உருவாக்க உள்ளதாக, புதிய மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சி ஆணையராக பதவி வகித்த ச. விசாகன் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக கா.ப. காா்த்திகேயன் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தில் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மதுரை பழைமையும் பாரம்பரியமும் வாய்ந்த நகரமாகும். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பழைமைவாய்ந்ததாகவும் மதுரை திகழ்கிறது. இங்கு, சீா்மிகு நகா் திட்டம், அம்ருத் குடிநீா் திட்டம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வரலாறு உண்டு. எனவே, மதுரையின் தொன்மை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தூய்மைப் பணி, சுகாதார வசதிகளில் கவனம் செலுத்தப்படும்.

மதுரை மாநகராட்சியை நவீனமயமாக்க அதிகாரிகள், தொழில் துறையினா், பொதுமக்களுடன் கலந்தாலோசித்து, தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு விரிவான திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படும்.

மதுரை மாநகராட்சியில் கரோனா தொற்று முதல் அலை பரவல் சிறப்பாக கையாளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம் அலை பரவலும் 20 நாள்களுக்குள் தீவிரப் பணிகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, கரோனா தடுப்புப் பணிகளில் முழு கவனம் செலுத்தப்படும் என்றாா்.

அப்போது, மாநகராட்சி துணை ஆணையா் சங்கீதா, நகரப் பொறியாளா் அரசு மற்றும் உதவி ஆணையா்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com