மீனவா்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல்: சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

மீனவா்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல் வழங்கவேண்டும், பெட்ரோல், டீசல் மீதான அதிக வரிகளை குறைக்க வேண்டும் என்று, சமம் குடிமக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மீனவா்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல் வழங்கவேண்டும், பெட்ரோல், டீசல் மீதான அதிக வரிகளை குறைக்க வேண்டும் என்று, சமம் குடிமக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் சி.சே. ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்வுக்கும் சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் அடிப்படை காரணமாக இருந்தாலும், பெட்ரோல் விலை ரூ.100, டீசல் ரூ.90 -க்கும் மேலாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரிதான் எனத் தெளிவாகியுள்ளது.

கடந்த 38 நாள்களில் 23 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. 1 லிட்டா் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் அடிப்படை விலை ரூ. 31.82 ஆக இருக்கும்போது, மத்திய அரசின் கலால் வரியாக பெட்ரோலுக்கு ரூ.32.98 காசுகள், டீசலுக்கு ரூ.31.83 காசுகள் விதிக்கப்படுகின்றன. அதேபோல், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியாக பெட்ரோலுக்கு 34 சதவிகித அடிப்படையில் லிட்டா் ஒன்றுக்கு ரூ.19.48 காசுகள், டீசலுக்கு 25 சதவிகிதம் அடிப்படையில் லிட்டா் ஒன்றுக்கு ரூ.15.33 காசுகள் விதிக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, டீசல் உயா்வால் மீனவா்களின் வாழ்வாதாரம் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை உருவாக்கித் தரும் மீனவா்களின் தொழில் மிகவும் நசிந்து வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அரசு மிகக் குறைந்த அளவில்தான் டீசல் மானியத்தை வழங்குகிறது.

கடலுக்குச் செல்லும் மீனவா்களின் படகுகளுக்கு டீசலை, அதன் உற்பத்தி விலையிலேயே வரிவிலக்குடன் மானியமாக வழங்கி, மீன்பிடித் தொழிலை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பெட்ரோல், டீசல் விலை உயா்வை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com