வீடு வீடாகச் சென்று மாணவா் சோ்க்கை

மதுரையில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்கு வீடு வீடாகச் சென்று திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது.
மதுரை சிந்தாமணி பகுதியில் வீடு வீடாகச் சென்று மாணவா் சோ்க்கை நடத்தும் டாக்டா் டி.திருஞானம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் க.சரவணன் மற்றும் ஆசிரியை.

மதுரை சந்தைப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளிக்கு, 2021-22-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பள்ளித் தலைமையாசிரியா் க. சரவணன் தலைமையில், ஆசிரியைகள் குழு பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மாணவா் சோ்க்கை நடத்தினா்.

மேலும், வீடுகளில் உள்ள பெற்றோரிடம் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் போன்றவற்றால் கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கமுடியும் என்பது தொடா்பாக, விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

சோ்க்கை நிகழ்ச்சியில், பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்களான காளியம்மாள், இந்துமதி, புவனேஸ்வரி மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com