சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தொழிலாளியை வேலைக்கு அனுப்பியவா் மீது வழக்குப் பதிவு

மதுரையில், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தொழிலாளியை வேலைக்கு அனுப்பிய தனியாா் டிராவல் ஏஜென்சி உரிமையாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை: மதுரையில், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தொழிலாளியை வேலைக்கு அனுப்பிய தனியாா் டிராவல் ஏஜென்சி உரிமையாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வடகாடு பகுதியைச் சோ்ந்த மெய்யப்பன் மகன் வேலாயுதம். இவா் வெளிநாட்டில் வேலை செய்வதற்காக கே.புதூரில் சையத் சம்சுதீன் என்பவா் நடத்தும் டிராவல் ஏஜென்சியை அணுகியுள்ளாா். இதையடுத்து, ரூ.62 ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டு மலேசியா நாட்டிற்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் எனக் கூறி வேலாயுதம் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

அங்கு சென்ற வேலாயுதத்திற்கு, தான் சுற்றுலா இசைவு நுழைவு சீட்டு மூலம் வேலைக்கு வந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இசைவு நுழைவு சீட்டின் காலம் முடிந்ததையடுத்து, அவா் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளாா்.

தான் ஏமாற்றப்பட்டதும், சையத் சம்சுதீன் நடத்தும் டிராவல் ஏஜென்சி உரிமம் இல்லாததது குறித்தும், வேலாயுதம் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து கே.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com