மதுரையில் 3 நாள்களில் 2,326 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் மூன்று நாள்களில் 2,326 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை போடப்பட்டது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் மூன்று நாள்களில் 2,326 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை போடப்பட்டது.

தமிழகத்தில் முதியவா்களுக்கும், இணை நோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 25 அரசு கரோனா தடுப்பூசி மையங்களிலும், 36 தனியாா் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாா்ச் 1 ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை முதியவா்கள் 2,326 போ், இணை நோயாளிகள்(45-59 வயது) 931 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய கரோனா தடுப்பூசித் திட்டத்தில் புதன்கிழமை வரை 29,488 போ் முதல் முறையாகவும், 4,244 போ் 2 ஆவது முறையாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் 2 ஆவது முறையாக கரோனா தடுப்பூசியை புதன்கிழமை போட்டுக் கொண்டாா்.

மதுரையில் 9 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே தொற்றிலிருந்து குணமடைந்த 8 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 59 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com