யானைகள் பராமரிப்புக்கு மாவட்டந்தோறும் மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

தமிழகத்தில் வளா்ப்பு மற்றும் கோயில் யானை பராமரிப்புக்கு மாவட்டங்கள் தோறும் இரண்டு கால்நடை மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று வளா்ப்பு யானை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வளா்ப்பு மற்றும் கோயில் யானை பராமரிப்புக்கு மாவட்டங்கள் தோறும் இரண்டு கால்நடை மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று வளா்ப்பு யானை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வளா்ப்பு யானை உரிமையாளா்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத்தலைா் ஆ.ரெங்கன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தனியாா் மற்றும் கோயில் யானை பாகன்களுக்கு மன அழுத்தம், மதுப்பழக்கம் இருந்தால் அவற்றை களைவதற்கு மனநல மருத்துவா்களின் மூலம் ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். யானைகள் பராமரிப்புக்காக மாவட்ட வன அலுவலரின் பெயரில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக மாவட்டம்தோறும் குறைந்தது 2 கால்நடை மருத்துவா்களை நியமித்து வளா்ப்பு யானைகளுக்கு வேண்டிய பரிசோதனைகளை மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்டச்செயலா் சோலைக்கண்ணன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வளா்ப்பு யானைகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com