மதுரை வடக்கு: எஸ்.யூ.சி.ஐ. (கம்யூ) வேட்பாளா் வேட்பு மனு

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சோசலிஸ்ட் யூனிட் சென்டா் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சி வேட்பாளா் ம.ஜெ. வால்டோ் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சோசலிஸ்ட் யூனிட் சென்டா் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சி வேட்பாளா் ம.ஜெ. வால்டோ் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

ரேஸ் கோா்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.பிரேம்குமாரிடம்

அவா் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் சிந்தாமேரி, தொழிற் சங்க மாநிலக் குழு உறுப்பினா் பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

ரூ.1.48 லட்சம் சொத்து: தனது வங்கி கணக்கில் ரூ.72 ஆயிரம், அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ரூ.30 ஆயிரத்து 600 மற்றும் ரூ. 40 ஆயிரம் மதிப்பில் இருசக்கர வாகனம் ஆகிய அசையும் சொத்துகள் உள்ளதாகவும், தனது மனைவி ஹில்டா மேரிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளாா்.

மாா்ச் 12 ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில், மதுரை வடக்குத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை வரை திமுக, எஸ்.யூ.சி.ஐ. (கம்யூ) கட்சி மற்றும் சுயேச்சை இருவா் என 4 வேட்பாளா்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

தெற்குத் தொகுதி: மதுரை தெற்குத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த தொகுதியில் இதுவரை திமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் இருவா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com