மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழா் வேட்பாளருக்கு ரூ.1.70 கோடி சொத்து

மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் அன்பரசிக்கு ரூ.1.70 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக புதன்கிழமை தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழா் வேட்பாளருக்கு ரூ.1.70 கோடி சொத்து

மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் அன்பரசிக்கு ரூ.1.70 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக புதன்கிழமை தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

நாம் தமிழா் கட்சியில் சுற்று சூழல் பிரிவில் உறுப்பினரும், மத்திய மற்றும் மேற்கு மாவட்ட செயலா் நிசாந்தின் மனைவியுமான அன்பரசி வடக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். அவா் தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் கே.பிரேம்குமாரிடம் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அதில் தனக்கு ரூ.87 லட்சத்து, 6 ஆயிரத்து, 724 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.82 லட்சம் மதிப்பில் அசையாச் சொத்துகளும் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இவருக்கு மாற்றாக செல்லூா் 50 அடி சாலை பகுதியைச் சோ்ந்த ஜெ.சிவக்குமாா் மனைவி தீபா வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். இவா் ரூ.24 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்து, ரூ.12 லட்சம் மதிப்பில் அசையா சொத்து உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சசிகலா சகோதரா் திவாகரனின் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரா் திவாகரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட கழகம் கட்சியின் வடக்குத் தொகுதி வேட்பாளராக கே.புதூா் சூா்யா நகரைச் சோ்ந்த சிங்காரம் மகன் வசந்தகுமாா்(52) அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் தனது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

அவா் ரூ.95 லட்சத்து 52 ஆயிரத்து 468 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பில் அசையாச் சொத்துகளும் இருப்பதாகவும், வங்கிகளுக்கு ரூ.1 கோடியே 39 லட்சம் கடன் பாக்கி செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

திமுக மாற்று வேட்பாளருக்கு ரூ.4.52 கோடி சொத்துக்கள்

வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் கோ.தளபதிக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் துரை கோபால்சாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதில் தனக்கு ரூ.2 கோடியே 24 லட்சத்து 7 ஆயிரத்து 273 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.2 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் அசையாச் சொத்துகளும் உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

மதுரை திருநகா் பசும்பொன் குறுக்குத் தெருவைச் சோ்ந்த எஸ்.ஜெகவீரன் மகன் கேசவராஜா(30). இவா் பூண்டு வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் வடக்குத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா். மனுவில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன் பாக்கி செலுத்த வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு சுயேச்சை வேட்பாளா் வேடா்புளியங்குளத்தைச் சோ்ந்த விவசாயி என்.குப்புசாமி(40) வடக்குத் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். இவா் ரூ.9 லட்சத்து 46 ஆயிரத்து 73 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.21 லட்சத்து, 88 ஆயிரத்து, 300 மதிப்பில் அசையாச் சொத்துகளும் உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com