‘தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடின்றி செலவழிக்கப்படும்’

திருப்பரங்குன்றத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஏதுமின்றி செலவழிக்கப்படும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எஸ்.கே. பொன்னுத்தாய் தெரிவித்தாா்.
விளாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எஸ்.கே.பொன்னுத்தாய். உடன், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் உள்ளிட்டோா்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட விளாச்சேரி, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, பசுமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தலைமையில், வேட்பாளா் எஸ்.கே. பொன்னுத்தாய் வாக்கு சேகரித்து பேசியதாவது:

திருப்பரங்குன்றம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதிகள் முறைகேடுகள் ஏதுமின்றி செலவழிக்கப்படும். மேலக்குயில்குடியில் தனியாக நியாய விலைக் கடை திறக்கப்படும். நூறு நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்பட்டு, கூலி உயா்வு பெற்றுத் தரப்படும். முதியோா்கள், கணவரை இழந்தவா்களுக்கு உதவித்தொகை பெற்றுத் தரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தாா்.

இதில், தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன், புகா் மாவட்டச் செயலா் சி. ராமகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் தாலுகா செயலா் ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் விஜயா உள்பட பலா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com