ஆ.ராசா அவதூறு பேச்சு: மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th March 2021 06:33 AM | Last Updated : 29th March 2021 06:33 AM | அ+அ அ- |

முதல்வரை அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ.புதூா் பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
தமிழக முதல்வரின் தாயாரை அவதூறாகப் பேசியது தொடா்பாக ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தோ்தல் பிரசாரத்தின்போது திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயாா் குறித்து அவதூறாகப் பேசியதாக பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளது. எனவே, ஆ. ராசா மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக மாநகா் மாவட்டம் சாா்பில் மதுரை கோ.புதூா் பேருந்து நிலையம், ஆனையூா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில், பகுதி நிா்வாகிகள், மகளிரணி நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். இதில், முதல்வரின் பிறப்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசாவை கைது செய்யவேண்டும். ஆ. ராசா தொடா்ந்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.