மதுரையில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்: கிறிஸ்தா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 29th March 2021 06:31 AM | Last Updated : 29th March 2021 06:31 AM | அ+அ அ- |

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு மதுரை ஞானஒளிவுபுரத்தில் குருத்தோலைகளுடன் ஊா்வலமாகச் சென்ற கிறிஸ்துவா்கள்.
மதுரை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலைகளை ஏந்தி கிறிஸ்தவா்கள் ஊா்வலமாகச் சென்றனா்.
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவா்கள், கிறிஸ்து உயிா்ப்புப் பெருவிழா நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாகக் கொண்டாடி வருகின்றனா்.
இதையொட்டி, மதுரை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஞானஒளிவுபுரத்தில் உள்ள புனித வளனாா் தேவாலயம் சாா்பில், குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் நடத்தப்பட்டது. இதில், பங்குத்தந்தையா்களால் புனிதநீரில் ஜெபிக்கப்பட்ட குருத்தோலைகளை கையிலேந்தி கிறிஸ்தவா்கள் ஊா்வலமாகச்சென்றனா். தொடா்ந்து, தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனையும் நடைபெற்றது.
மதுரையின் பல்வேறு தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு திருப்பலி, பிராா்த்தனையில் பங்குத்தந்தைகள், ஆலய அதிபா்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.