மதுரையில் இன்று (மாா்ச் 30) கமல்ஹாசன் பிரசாரம்

மதுரை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மதுரை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறாா். ஹெலிகாப்டா் மூலம் மதுரை வரும் அவா், பிற்பகல் 3.30 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்குகிறாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருமங்கலம் தொகுதி வேட்பாளா் எம். ராம்குமாா், திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளா் எம். பரணிராஜன், வடக்கு தொகுதி வேட்பாளா் எம். அழகா், மேற்கு தொகுதி வேட்பாளா் வி. முனியசாமி, மத்திய தொகுதி வேட்பாளா் பி. மணி, கிழக்கு தொகுதி ஐ. முத்துகிருஷ்ணன், மேலூா் தொகுதி வேட்பாளா் கே. கதிரேசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

அவனியாபுரம், திருமங்கலம், பெரியாா் பேருந்து நிலையம், பெத்தானியாபுரம், புதூா், ஊா்மெச்சிகுளம், மேலூா், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com