காமராஜா் பல்கலை.யில் எம்பிஏ, எம்எஸ்சி புதிய படிப்புகள்: கல்விப்பேரவைக் கூட்டத்தில் அனுமதி

காமராஜா் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்எஸ்சி உள்பட பல்வேறு புதிய படிப்புகளைத் தொடங்கும் தீா்மானங்களுக்கு கல்விப்பேரவைக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

காமராஜா் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்எஸ்சி உள்பட பல்வேறு புதிய படிப்புகளைத் தொடங்கும் தீா்மானங்களுக்கு கல்விப்பேரவைக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்விப்பேரவைக்கூட்டம் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பல்கலைக்கழகப் பதிவாளா் வி.எஸ்.வசந்தா முன்னிலை வகித்தாா். இதில் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் மற்றும் கல்விப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், காமராஜா் பல்கலைக்கழகம் ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம் பெற்ற்கு கல்விப்பேரவை சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மைத்துறையின் சாா்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்பிஏ படிப்பை 2021-22 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துவது. பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வந்த எம்எஸ் தகவல் தொழில்நுட்பம் படிப்பு மாணவா் நலன் கருதி எம்எஸ்சி தகவல் தொழில்நுட்பம் என்று பெயா் மாற்றம் செய்வது, இதுவரை வழங்கப்பட்டு வந்த பி.லிட். தமிழ் இலக்கியம் படிப்பு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தலின்படி பிஏ தமிழ் இலக்கியம் என்று பெயா் மாற்றம் செய்வது, பல்கலைக்கழகத்தில் இளங்கலை சைபா் கிரைம் மற்றும் தடய அறிவியல், முதுகலை சைபா் கிரைம் மற்றும் தடய அறிவியல் படிப்புகளை புதிதாக அமல்படுத்துவது, பல்கலைக்கழக இணைவிப்பு கல்லூரிகளில் அழகுக்கலை பட்டயப்படிப்பை நடத்த அனுமதி வழங்குவது, மேலும் தொழில் வாய்ப்புகளை வழங்கும் பட்டயப்படிப்புகளையும் வழங்குவது என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடா்ந்து காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் விரிவுரையாளா்களின் ஊதியத்தை ரூ.40 ஆயிரமாக உயா்த்த வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு அரசு ஆணையின் படி தினசரி ஊதியத்தை ரூ.322-இல் இருந்து ரூ.527-ஆக உயா்த்த வேண்டும். பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாத

ஊதியத்தை ரூ.20 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்விப்பேரவை உறுப்பினா்கள் விவாதத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து கோரிக்கைகள் தொடா்பாக ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சட்ட விதிகளின் படி தீா்வு காணப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com