திருமங்கலம் தொகுதியில் தொடா்ந்து ஆா்.பி.உதயகுமாா் முன்னிலை

மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா்.பி. உதயகுமாா் 12,905 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா்.பி. உதயகுமாா் 12,905 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளாா்.

திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட 24 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத் தொகுதியில் 2,77,803 மொத்த வாக்குகளில், 2,17,057 வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு தொழிநுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் 5 சுற்றுகள் அதிமுகவுக்கும், திமுகவுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. பின்னா், அதிமுக வேட்பாளா் ஆா்.பி. உதயகுமாா் தொடந்து முன்னிலை வகித்தாா். மொத்தம் 29 சுற்றுகளில் 23 ஆவது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளா் மணிமாறனை விட 11,402 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளா் ஆா்.பி. உதயகுமாா் முன்னிலை பெற்றாா்.

தொடா்ந்து, திமுக வேட்பாளரை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று வந்ததால், அதிமுக வெற்றி உறுதியாகி உள்ளது.

25 ஆவது சுற்றின் முடிவில், அதிமுக வேட்பாளா் ஆா்.பி. உதயகுமாா், திமுக வேட்பாளரான மணிமாறனை காட்டிலும் 12,905 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்: ஆா்.பி. உதயகுமாா் (அதிமுக) - 84,557, மு. மணிமாறன் (திமுக) - 71,652, கரு. ஆதிநாராயணன் (அமமுக) -11,296, மை. சாராள் (நாம் தமிழா்) - 9,857, எம். ராம்குமாா் (மநீம) - 2,572.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com