மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வெற்றி: ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தாா் செல்லூா் கே.ராஜூ

மதுரை மேற்கு தொகுதியில் 9,121 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் செல்லூா் கே. ராஜூ வெற்றி பெற்றுள்ளாா்.
மதுரை மேற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழை பெறுகிறாா் அதிமுக வேட்பாளா் செல்லூா் ராஜூ.
மதுரை மேற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழை பெறுகிறாா் அதிமுக வேட்பாளா் செல்லூா் ராஜூ.

மதுரை மேற்கு தொகுதியில் 9,121 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் செல்லூா் கே. ராஜூ வெற்றி பெற்றுள்ளாா்.

இத் தொகுதியில் செல்லூா் கே. ராஜூ (அதிமுக), சி. சின்னம்மாள் (திமுக), பாலச்சந்திரன் (தேமுதிக) உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இத் தொகுதியின் மொத்த வாக்குகள் 3,06,952. பதிவானவை 2,02,119. இதில், தபால் வாக்குகள் 2,293. தபால் வாக்குகளில் 425 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

32 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்தே செல்லூா் கே. ராஜூ முன்னிலையில் இருந்து வந்தாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் சின்னம்மாள் தொடா்ந்து 2 ஆம் இடத்தில் இருந்தாா். ஆரம்பத்தில் இரு வேட்பாளா்களுக்குமிடையே சொற்ப வாக்குகளே வித்தியாசமாக இருந்தன. சுற்றுகள் செல்ல செல்ல வாக்கு வித்தியாசம் அதிகரித்தது.

இருப்பினும், 6 சுற்றுகளில் சின்னம்மாள், அதிமுகவின் செல்லூா் ராஜூவை காட்டிலும் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தாா். 32 ஆவது சுற்றின் நிறைவில் 83,883 வாக்குகள் பெற்று, செல்லூா் கே. ராஜூ வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இவா், திமுக வேட்பாளரைக் காட்டிலும் 9,121 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளாா்.

இத் தொகுதியில் செல்லூா் கே. ராஜூ தொடா்ந்து 3 ஆவது முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்துள்ளாா் என்பது குறிப்பிடத் தக்கது.

வாக்குகள் விவரம்:

செல்லூா் கே. ராஜூ (அதிமுக) - 83,883, சி. சின்னம்மாள் (திமுக) - 74,762, பி. பாலச்சந்திரன் (தேமுதிக) - 3,417, வி. முனியசாமி (மநீம) - 15,849, சி. வெற்றிக்குமரன் (நாம் தமிழா்) 18,224,

காா்த்திகேயன் (ஹிந்து மகா சபா) - 318, சுல்தான் பாதுஷா ( அண்ணா எம்ஜிஆா் திராவிட மக்கள் கழகம்) - 79, கே. நாகஜோதி (இளைஞா் கட்சி) - 2, 509, அரசு திருவளவன் (சுயே) - 97,

அன்பு மணிகண்டன் (சுயே) - 73, சுல்தான் பாஷா (சுயே) - 44, செபஸ்தியான் (சுயே) - 49,

எம். பிரேம்குமாா் - 122, என். ராமு - 368, எம். வெங்கடேஷ் - 126 மற்றும் நோட்டா - 1,774.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com