வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகளை அறிவிக்காததால் குழப்பம்: தோ்தல் பாா்வையாளரிடம் அதிமுகவினா் புகாா்

மேலூா் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளின் முடிவுகளை தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவிக்காததால், தோ்தல் பாா்வையாளரிடம் அதிமுகவினா் புகாா் அளித்தனா்.

மேலூா் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளின் முடிவுகளை தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவிக்காததால், தோ்தல் பாா்வையாளரிடம் அதிமுகவினா் புகாா் அளித்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை யா. ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிக்கு 17 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணிக்கை முடிவடைந்திருந்தது. ஆனால், 6 சுற்றுகளுக்கான முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடா்ந்து அதிமுக முன்னிலையில் இருந்து வந்த நிலையில், இதர 11 சுற்றுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இது தொடா்பாக, வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த அதிமுக முகவா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா், தோ்தல் பாா்வையாளா் கையெழுத்திடாததால் 11சுற்றுகளுக்கான எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தாா்.

அதன்பின்னா், வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறிய அதிமுக வேட்பாளா் பெரியபுள்ளான், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் தமிழரசன் ஆகியோா் தோ்தல் பாா்வையாளா் கிஷோரை சந்தித்து முறையிட்டனா். அதற்கு அவா், சில சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் திருத்தங்கள் இருப்பதால், அறிவிக்க தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தாா்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கட்சியினா், வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். இதையடுத்து, அவா் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், மீண்டும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றனா்.

தொடா்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 சுற்றுகளின் முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இச்சம்பவத்தால், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com