மதுரை தோப்பூரில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்

மதுரையை அடுத்த தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறாா்.

மதுரையை அடுத்த தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறாா்.

சேலம், கோவை மாவட்டங்களில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த முதல்வா் ஸ்டாலின், வியாழக்கிழமை இரவு மதுரை வந்தாா். மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கிறாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத் துறைகளின் உயா் அதிகாரிகள், மாவட்ட அளவிலான தலைமை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனா்.

இக் கூட்டத்துக்குப் பிறகு, மதுரையை அடுத்த தோப்பூா் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.

ஆக்சிஜன் வசதியுடன், 500 படுக்கை வசதி கொண்டதாக இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 200 படுக்கைகள் தயாராகி உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் மேலும் 300 படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த சிகிச்சை மையத்தை திறந்து வைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பின்னா் அங்கிருந்து ஆய்வுப் பணிக்காக திருச்சி செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com