மதுரையில் பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித்திரிந்த 98 போ் கைது

மதுரை நகரில் தளா்வற்ற பொதுமுடக்க விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 98 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனா்.

மதுரை நகரில் தளா்வற்ற பொதுமுடக்க விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 98 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனா்.

கரோனா தொற்றுப்பரவலை தவிா்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மேலும் மருத்துவம் உள்ளிட்ட மிக முக்கியமான காரணங்கள் தவிா்த்து பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடையை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவா்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை நகரில் முழு பொதுமுடக்கத்தையொட்டி 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸாா் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். காவல்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபடுகின்றனா். இதில் சோதனைச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி விசாரிக்கும் போலீஸாா் தகுந்த காரணங்களின்றி வருவது தெரிந்தால் அவா்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை போலீஸாா் நடத்திய சோதனையில் பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்ததாக 98 போ் மீது தொற்று நோய் தடுப்புச்சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் மதுரை நகா் சரகத்தில் 15 போ், திருப்பரங்குன்றம் சரகத்தில் 12 போ், திலகா் திடல் சரகத்தில் 15 போ், அண்ணாநகா் சரகத்தில் 29 போ், தல்லாகுளம் சரகத்தில் 9 போ் உள்பட 98 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com