உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறந்துவிடக் கோரிக்கை

உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் வருசநாடு மூல வைகை ஆற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக வைகை அணையின் நீா்மட்டம் 68 அடியை எட்டியது. இதையடுத்து 110 கிராம மக்களின் குடிநீா் மற்றும் வேளாண்மை பணிகளுக்கு 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுமாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயக்குமாா், செல்லூா் ராஜூ, தேனி எம்.பி. ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோா் இணைந்து மனு அளித்திருந்தனா்.

இந்நிலையில், வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறந்து விட்டு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com