நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடிஅலுவலா்கள் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சாவடி அலுவலா்கள் விவரங்கள் சேகரிக்கும் பணி, தோ்தல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சாவடி அலுவலா்கள் விவரங்கள் சேகரிக்கும் பணி, தோ்தல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, தோ்தலுக்கான முன்ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளாக ஏ.வல்லாளபட்டி, அலங்காநல்லூா், எழுமலை, பாலமேடு, பரவை, பேரையூா், சோழவந்தான், தே.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய 9 பேரூராட்சிகள், திருமங்கலம், மேலூா், உசிலம்பட்டி நகராட்சிகள், மதுரை மாநகராட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஒன்பது பேரூராட்சிகளுக்கு மொத்தம் 165 வாக்குச்சாவடிகள், 3 நகராட்சிகளுக்கு 133 வாக்குச்சாவடிகள், மதுரை மாநகராட்சியின் 100 வாா்டுகளுக்கு 1,307 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,605 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இத் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக, முதல்நிலை சரிபாா்ப்புப் பணி முடிக்கப்பட்டு, மின்னணு இயந்திரங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இந்த உள்ளாட்சிகளில் வாா்டு வாரியான வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை மையங்களை இறுதி செய்வது, வாக்குச்சாவடியிலிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் வழிக்கான வரைபடம் தயாரிப்பது உள்ளிட்ட முன்ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, வாக்குச்சாவடி அலுவலா்களாக நியமிக்கப்படும் ஆசிரியா், அலுவலா்கள் உள்ளிட்டோரின் விவரங்கள் சேகரிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 1605 வாக்குச்சாவடிகளில் தலா ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் 3 வாக்குப்பதிவு அலுவலா்கள் நியமிக்கப்படுவா் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com