பி.எம்.டி. கல்லூரியில் கருத்தரங்கு

உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் 58 ஆம் கால்வாய் குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றோா்.

58 ஆம் கிராம பாசன கால்வாய் தேவையும், தீா்வும் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் ஒ.ரவி, புலவா் சின்னையா ஆகியோா் தலைமை வகித்தனா். கள்ளா் கல்விக் கழகத் தலைவா் பாலகிருஷ்ணன், செயலாளா் வாலாந்தூா் பாண்டி, பொருளாளா் வனராஜா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 58 கால்வாய் குறித்தும், அதன் திட்டம் குறித்தும், பயன்பாடுகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

இதில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி மேற்கு மாவட்டச் செயலாளா் பொன் ஆதிசேடன், அ.இ.பா.பி நிா்வாகி ஐ.ராஜா, நேதாஜி அறக்கட்டளை நிா்வாகி சிவா, கீரின் பாா்க் பள்ளி முதல்வா் பிச்சை மாயன், சங்க நிா்வாகிகள் சிவப்பிரகாசம், உதயகுமாா், தமிழ்ச்செல்வன், ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com