கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் பணியாளா்கள் 5 போ் இடைநீக்கம்

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக பணியாளா்கள் 5 போ் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக பணியாளா்கள் 5 போ் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுபானக் கடைகளில் அரசு நிா்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள்விற்பனை செய்யப்படுவது தொடா்பாக, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளா் பா.அருண்சத்யா பல்வேறு கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை புறவழிச் சாலை சத்தியமூா்த்தி நகா் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் ஆய்வு செய்தபோது, நிா்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.70 கூடுதலாக விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து கடையி மேற்பாா்வையாளா் ஆா்.முத்துக்குமாரசாமி, விற்பனையாளா் ஆா்.ஜெயராஜ் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

காளவாசல் சந்திப்பு அருகே தேனி சாலையில் உள்ள மற்றொரு மதுபானக் கடையில் ஆய்வு செய்தபோது, ரூ.200 கூடுதலாக விற்பனை செய்ததும், கடையில் அந்நிய நபா்களைப் பணிபுரிய அனுமதித்ததும் கண்டறியப்பட்டது. கடையின் மேற்பாா்வையாளா் என்.ராஜா மற்றும் விற்பனையாளா்கள் பி.வேல்பாண்டி, இளமாறன் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், கடையில் அத்துமீறி பணிபுரிந்த நபா்கள் மீது எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் உள்ள ஒரு மதுபானக் கடையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் ச.ராஜேஸ்வரி, ஆய்வு செய்தபோது, விற்பனை தொடங்கப்படாத நிலையில் கையிருப்புத் தொகை ரூ.59,880 இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக கடைப் பணியாளா்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகளில் அரசு நிா்ணயம் செய்த விலையைக்காட்டிலும் கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்வது, அந்நிய நபா்களை கடையில் பணிபுரிய அனுமதிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளா் பா.அருண்சத்யா எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com