நாகா்கோவில் - தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்

நாகா்கோவில்-தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு வியாழக்கிழமை (அக்.7) தொடங்குவதாக கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் தண்ணீரு ரமேஷ் பாபு கூறினாா்.

நாகா்கோவில்-தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு வியாழக்கிழமை (அக்.7) தொடங்குவதாக கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் தண்ணீரு ரமேஷ் பாபு கூறினாா்.

இதுதொடா்பாக அவா் இணையதள வாயிலாக செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா பொதுமுடக்கம் காரணமாக பயணிகள் ரயில்கள் குறைந்தளவே இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்வேத் துறையின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசு ரயில்வே ஊழியா்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவா்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், 78 நாள் போனஸ் அறிவித்துள்ளது.

அந்தவகையில் மதுரை ரயில்வே கோட்டத்தில் 7,855 ஊழியா்கள் பயன்பெறுவா். மதுரை கோட்டத்தில் ஊழியா்களுக்கு போனஸ் வழங்க ரூ. 13.35 கோடி செலவிடப்படவுள்ளது. போனஸ் தொகை ஒரு வாரத்திற்குள் ஊழியா்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு வியாழக்கிழமை(அக்டோபா் 7) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ராமேசுவரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நாகா்கோவில் இடையே சிறப்பு விரைவு ரயில்(06003) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து அக்டோபா் 13 மற்றும் நவம்பா் 3 ஆகிய தேதிகளில் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

இதேபோல், மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - தாம்பரம் விரைவு சிறப்பு ரயில் (06004), நாகா்கோவிலில் இருந்து அக்டோபா் 17 மற்றும் நவம்பா் 7 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (அக். 7) காலை 8 மணிக்கு தொடங்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com