மதுரையில் சாலைத் தடுப்புகளை அகற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சா் காவல் ஆணையரிடம் மனு

மதுரையில் சாலைத் தடுப்புகளை அகற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ புதன்கிழமை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தாா்.

மதுரையில் சாலைத் தடுப்புகளை அகற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ புதன்கிழமை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தாா்.

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, காவல் ஆணையா் பிரேமானந்த் சின்காவை சந்தித்து மனு அளித்தாா். அந்த மனுவில், மதுரை நகரில் அண்மைக்காலமாக வழிப்பறி, திருட்டு, கொலை உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. எனவே நகரில் சோதனைச்சாவடிகளை அதிகரிக்க வேண்டும், இரவு ரோந்துகளை அதிகரிக்க வேண்டும். கீரைத்துறை காவல்நிலையம் வில்லாபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் கீரைத்துறையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் மதுரை நகரில் சாலைகளின் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ, மாணவியா், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே கோரிப்பாளையம் தேவா் சிலை முதல் அண்ணா பேருந்து நிலைய ரவுண்டானா வரையிலும், நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் பிபிகுளம் வரையிலும், கீழவாசல் பகுதியிலும் சாலைத்தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். அவருடன், அதிமுக மாநகா் மாவட்ட பொருளாளா் இரா. அண்ணாத்துரை, மாவட்ட துணைச்செயலா் ராஜா, எம்ஜிஆா் மன்ற மாநில துணைச்செயலா் எம்.எஸ்.பாண்டியன், மாநில மாணவரணி இணைச்செயலா் குமாா் மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் செல்லூா் கே.ராஜூ கூறியது: மதுரையில் அரசு ஒப்பந்தங்களில் ஆளும் திமுகவினரின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியில் அண்மையில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதே போல வீட்டு வசதி வாரிய ஒப்பந்தங்களிலும் 150 போ் பங்கேற்க இயலாமல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

ஆளும் திமுகவினரின் அத்துமீறலால் அதிமுகவினா் உள்ளிட்ட பிறா் அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்பது இல்லை. இதுபோன்ற முறைகேடுகள் தொடா்ந்து நடந்தால் யாா் அதில் ஈடுபடும் ஆளும்கட்சியினரின் பெயா் விவரங்களை வெளியிடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com