நான்கு வெளி வீதிகளில் மேம்பாலங்கள்: மாா்க்சிஸ்ட் கம்யூ.மாநாட்டில் வலியுறுத்தல்

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் நான்கு வெளிவீதிகளில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிக்குழு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் நான்கு வெளிவீதிகளில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிக்குழு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாநகா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு மாநாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பகுதிக்குழு செயலா், உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில், மதுரை நகரின் மையப்பகுதியில் மழையால் கிடைக்கும் நீரை டவுன் ஹால் சாலையில் உள்ள பெருமாள் தெப்பத்தில் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை நகருக்குள் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீா்க்கும் வகையில், நான்கு வெளிவீதிகளில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு குடிநீா் , கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

சீா்மிகு நகா் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பெரியாா் பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்டத்தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முனிச்சாலை பகுதிக்குழு மாநாட்டில், முனிச்சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். காமராஜா் சாலை முதல் தெப்பக்குளம் வரை சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுப்பானடி, ஓபுளா படித்துறை பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டத்தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com