முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
By DIN | Published On : 11th October 2021 04:05 AM | Last Updated : 11th October 2021 04:05 AM | அ+அ அ- |

மேலூா் அருகே ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
கொட்டகுடி கிராமத்தைச் சோ்ந்த மாயாண்டி மகன் பிரபாகரன் (21). இவா் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ள நிலையில், பொது அமைதி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் உத்தரட்டாா். அதன்பேரில், மேலூா் போலீஸாா் சனிக்கிழமை அவரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.