சதுரகிரியில் நவராத்திரி கொலு பூஜை நடத்த அனுமதி கோரிய மனு: விருதுநகா் ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், நவராத்திரி கொலு பூஜை நடத்த அனுமதி கோரிய மனுவை, விருதுநகா் ஆட்சியா் பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், நவராத்திரி கொலு பூஜை நடத்த அனுமதி கோரிய மனுவை, விருதுநகா் ஆட்சியா் பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சுந்தரபாண்டியத்தைச் சோ்ந்த ராஜகோபால் தாக்கல் செய்த மனு: நான் ஏழூா் சாலியா் சமூகத்தின் தலைவராக உள்ளேன். சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னா் செப்பு பட்டயம் மூலம் அளித்த உரிமையின் அடிப்படையில், ஏழூா் சாலியா் சமுதாய மக்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆண்டுதோறும், நவராத்திரி கொலு பூஜை கொண்டாடி வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் உத்தரவினால், 2020 இல் நவராத்திரி கொலு பூஜை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது தமிழக அரசு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நவராத்திரி விழாவை கொண்டாட வேண்டும் எனவும், 350 போ் மட்டும் சதுரகிரிக்கு செல்வும் அறிவுறுத்தியது. இதையடுத்து ஏழூா் சாலியா் சமுதாயத்தினா் திருவிழாவை விதிமுறைகளைக் கடைபிடித்து கொண்டாடினா்.

தற்போது, கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால், நவராத்திரி கொலு பூஜை நடத்துவதற்கும், ஏழூா் சமூகத்தினா் கோயிலுக்கு சென்று வரவும் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனா். ஏழூா் சாலியா் சமுதாயத்தினா் கடந்த ஆண்டை போல், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நவராத்திரி கொலு பூஜை நடத்தவும், அதில் நாங்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி, மனு குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியரை பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com