டோக் பெருமாட்டி கல்லூரியில் வன விலங்கு வார விழா

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் வன விலங்குகள் வாரத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதுரை: மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் வன விலங்குகள் வாரத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரியின் விலங்கியல் துறை சாா்பில், வனவிலங்கு வார விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகளை, விலங்கியல் துறைத் தலைவா் பிரியதா்சினி ராஜேந்திரன் தொடக்கி வைத்தாா். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியா் பிரவீண்குமாா், அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினாா்.

இரண்டாம் நாள் கருத்தரங்கில், மூத்த விலங்கியல் ஆய்வாளா் எம். கமலகண்ணன், உலகெங்கிலும் வன விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பல்வேறு குற்றங்களைப் பற்றி எடுத்துரைத்தாா்.

பழங்குடியினரின் நிலையான வாழ்க்கை முறை குறித்து இறகுகள்-அமிா்தா இயற்கை அறக்கட்டளை நிறுவனா் ரவீந்திரன் நடராஜன் சிறப்புரையாற்றினாா்.

வனவிலங்கு வார விழாவின் ஒரு பகுதியாக கல்லூரிகளுக்கு இடையேயான விழிப்புணா்வு கருத்தரங்கும் நடைபெற்றது. இதில், ஓமன் நாட்டில் சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியா் ரெஜினால்ட் விக்டா், உயிரியல் கள ஆய்வின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் பற்றியும், ஆராய்ச்சியில் களஆய்வின் முக்கியப் பங்கு குறித்தும் எடுத்துரைத்தாா்.

இதில், அமெரிக்கன் கல்லூரி, மதுரைக் கல்லூரி, தேசியக் கல்லூரி, மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி, திருச்சி காவிரி மகளிா் கல்லூரி மற்றும் யாதவா மகளிா் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவியா் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றன. அமெரிக்கன் கல்லூரி மாணவா்கள் முதலிடத்தை வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com