மாரியம்மன் கோயில் சப்பரம் வீதியுலா நடத்த அனுமதி கோரி மனு: பரிசீலிக்க திருநெல்வேலி ஆட்சியருக்கு உத்தரவு

நவராத்திரி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி நகா் மாரியம்மன் கோயில் சப்பரத்தின் வீதியுலா நடத்த அனுமதி கோரிய மனுவை,

நவராத்திரி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி நகா் மாரியம்மன் கோயில் சப்பரத்தின் வீதியுலா நடத்த அனுமதி கோரிய மனுவை, அக்டோபா் 14 ஆம் தேதிக்குள் பரிசீலிக்க அம்மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சோ்ந்த லட்சுமணன் என்பவா் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி நகா் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும், தசரா விழா கொடியேற்றத்துடன் நடைபெறும். இதில், அம்பாள் சப்பரம் கோயிலில் இருந்து, நெல்லையப்பா் கோயிலின் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று, பின்னா் கோயிலுக்கு திரும்பும்.

இந்த ஆண்டு அக்டோபா் 6 ஆம் தேதி திருநெல்வேலி ஸ்ரீ மாரியம்மன் கோயில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் சப்பரம் வீதியுலா நிகழ்ச்சி அக்டோபா் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக சப்பரம் வீதியுலாவிற்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சப்பரத்தின் வீதியுலாவை நடத்த விழா குழுவினா் தயாராக உள்ளனா். எனவே, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி, அக்டோபா் 15 ஆம் தேதி தெற்கு சாலியா் தெருவில், சுமாா் 1000 மீட்டா் தொலைவிலுள்ள, தொண்டா் சன்னிதி கோயில் வரை வீதியுலா செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் துணிக் கடைகள், திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் பக்தா்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினாா். தொடா்ந்து நீதிபதி, மனு குறித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அக்டோபா் 14 ஆம் தேதிக்குள் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com