முதுநிலை மருத்துவப் படிப்பில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மருத்துவா்கள் பணிபுரியும் இடத்தின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரிய மனுவின்

மருத்துவா்கள் பணிபுரியும் இடத்தின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரிய மனுவின் மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த மருத்துவா்கள் ராஜாதிஃபாத்திமா, சாகுல் ஹமீது, மணிமொழி ஆகியோா் தாக்கல் செய்த மனு: நாங்கள் மூவரும் எம்பிபிஎஸ் பட்டத்தோடு முறையே குழந்தை நலம், மயக்கவியல், மகப்பேறு மருத்துவம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளோம். முதுகலை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது பணிபுரியும் இடங்களின் அடிப்படையில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால், இதற்கு தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசு தரப்பில், உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பணிபுரியும் இடங்களின் அடிப்படையில் ஊக்க மதிப்பெண்களை வழங்குவதற்கான வரையறையை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவானது மலைப்பகுதிகள், பின்தங்கிய பகுதிகள், மருத்துவ வசதி அடா்த்தி குறைவாக உள்ள பகுதிகள், சுகாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதிகள், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து பிரிவு, அவசர சிகிச்சை உள்ளிட்ட சில பிரிவுகளில் பணிபுரிவோருக்கு நூறு சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக விண்ணப்பித்த எங்கள் மூவருக்கும், நூறு சதவீத ஊக்க மதிப்பெண்களை வழங்கவில்லை. இது சட்டவிரோதமானது என்பதால், உரிய ஊக்க மதிப்பெண்களை வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிபிட்டிருந்தனா்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பணிபுரியும் இடங்களின் அடிப்படையில், முதுநிலை மருத்துவப் படிப்பில் ஊக்க மதிப்பெண்கள் வழங்குவது குறித்த, ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com