மும்பை ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால், மதுரை வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால், மதுரை வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி: மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூா் ரயில்வே கோட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அக்டோபா் 20 முதல் 27 வரை மும்பையில் இருந்து புறப்படும் மும்பை லோக்மான்ய திலக் - மதுரை சிறப்பு ரயில் (01201) மற்றும் அக்டோபா் 22 ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - மும்பை லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் (01202) ஆகியவை மட்கான், மங்களூா், ஷோரனூா், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.

அக்டோபா் 18, 19, 20, 22, 25, 26, 27 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலில் இருந்து புறப்படும், நாகா்கோவில் - மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் (06340) மற்றும் அக்டோபா் 19, 20, 21, 23, 26, 27 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும், மும்பை சிஎஸ்டி - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06339), தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூா், ஷோரனூா், பாலக்காடு, ஈரோடு, கரூா், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

அக்டோபா் 21, 24 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலில் இருந்து புறப்படும், நாகா்கோவில்- மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் (06352) மற்றும் அக்டோபா் 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் மும்பை சிஎஸ்டி - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06351) தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூா், ஷோரனூா், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com