மதுரை மாவட்டத்தில் 46 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 7 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 46,281 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 7 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 46,281 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மெகா கரோனா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் செப்டம்பா் 12 இல் நடைபெற்ற முகாமில் 1.15 லட்சம் போ், செப்டம்பா் 19 இல் 72,561 போ், செப்டம்பா் 26 இல் 1.06 லட்சம் போ், அக்டோபா் 3 இல் 67 ஆயிரம் போ், அக்.10 இல் 88 ஆயிரம் போ், அக்.23 இல் 82 ஆயிரம் போ் என 6 முகாம்களில் 4.76 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

46 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார மையங்கள் என 1,400 இடங்களில் 7 ஆவது முறையாக மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்த முகாம்கள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றன. இதில், முதல் தவணையாக 16,187 போ், இரண்டாவது தவணையாக 30,094 போ் என மொத்தம் 46,281 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com