பசும் பால் குடித்த குழந்தை பலி

மதுரையில் பசும்பால் குடித்ததால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, 35 நாள்களான குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரையில் பசும்பால் குடித்ததால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, 35 நாள்களான குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை ராஜா மில் சாலை, கனகவேல் காலனியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (33). இவருக்கு குகன் என்ற 35 நாள்களான ஆண் குழந்தை இருந்தது. போதியளவில் தாய்ப் பால் இல்லாததால், குழந்தைக்கு கடந்த சில நாள்களாக பசும்பால் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதில் குகனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

குழந்தையை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு, குழந்தை குகன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பாக மருத்துவா் ஒருவா் கூறியது: பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் இல்லையெனில் தாய்மாா்கள் மருத்துவா்களை அணுகி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு பசும்பால் ஜீரணமாவது கடினம் என்பதால், உடல்நலக் குறைவு ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com