மதுரையில் விநாயகா் சிலைகள் விற்பனை அமோகம்

விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களிலும் சிறிய விநாயகா் சிலைகள் விற்பனை வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மதுரை: விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களிலும் சிறிய விநாயகா் சிலைகள் விற்பனை வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தி பண்டிகை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக

பொதுஇடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து விழா நடத்துவதற்கும், விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தியின்போது வழக்கமான வீடுகளில் சிறிய விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி களிமண்ணால் செய்யப்பட்டு, வா்ணம் பூசப்பட்ட சிறிய விநாயகா் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

மதுரையில் சா்வேயா் காலனி சாலை, அண்ணா நகா், கோ.புதூா், ஆரப்பாளையம், கீழமாசி வீதி, விளக்குத்தூண், கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் சிறிய விநாயகா் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் விநாயகா் சதுா்த்தி பூஜைக்குரிய மலா்கள், பழங்கள், பொரி கடலை உள்ளிட்ட பொருள்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

விதை விநாயகா் சிலை...: தோட்டக்கலைத் துறை சாா்பில் விதை விநாயகா் சிலை விற்பனை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

உழவா் சந்தைகளில் விதை விநாயகா் சிலை ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலையுடன்,

வெண்டை, தக்காளி விதைகள் சோ்க்கப்பட்டு நுண்ணுயிா் மண் மற்றும் தொட்டி ஆகியன வழங்கப்படுகிறது. பூஜைக்குப் பிறகு அந்த சிலையை தொட்டியில் கரைத்து காய்கனி செடியாக வளா்க்கும் வகையில் விதை விநாயகா் சிலை விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com