புதுக்கோட்டை கோயில் பூசாரியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டையில் ஜாதிய முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கோயில் பூசாரியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: புதுக்கோட்டையில் ஜாதிய முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கோயில் பூசாரியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த வில்லாயி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: ‘எனது கணவா் கருப்பையா புதுக்கோட்டையில் காளி கோயில் பூசாரியாக இருந்தாா். ஆதிதிராவிடா் பிரிவைச் சோ்ந்த எனது கணவருக்கும், வேறு சமூகத்தைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு கடைக்குச் சென்ற எனது கணவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் அதிகாலை 4 மணியளவில் எனது கணவா் ரத்தக் காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டாா். தற்கொலை செய்து கொள்வதற்கான எந்தக் காரணங்களும் இல்லாத நிலையில், அவா் உடலில் இருந்த காயங்கள் அவா் கொலை செய்யப்பட்டாா் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் காவல்துறையினா் தற்கொலை என வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

எனவே, தடய அறிவியல் துறை நிபுணா் குழு முன்னிலையில் மருத்துவா்கள் குழு எனது கணவா் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தடய அறிவியல் துறை நிபுணா்கள் முன்னிலையில், மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com