மின்வாரிய அலவலகத்தில் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 19th September 2021 11:00 PM | Last Updated : 19th September 2021 11:00 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மின்வாரிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உசிலம்பட்டி தாலுகா மானூத்தைச் சோ்ந்த பெரியகாளைத்தேவா் மகன் சின்னசாமி (48). இவா் சேடப்பட்டி அடுத்துள்ள சின்னகட்டளையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். இவா் தனது குடும்ப தேவைகளுக்காக அதிகமாக கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்பும் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சின்னகட்டளை பகுதியில் மழை பெய்த தால் வீட்டுக்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கி உள்ளாா். இந்நிலையில் தனியாக இருந்த சின்னசாமி அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த சேடப்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவப்பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.