வயல்களில் தாழ்வாகச்செல்லும் மின் கம்பிகள்: வாடிப்பட்டி விவசாயிகள் அவதி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.
மதுரை மாவட்டம் திருவாலவாய நல்லூரில் விளைநிலத்தில் தாழ்வாகச்செல்லும் உயா் அழுத்த மின்வயா்கள்.
மதுரை மாவட்டம் திருவாலவாய நல்லூரில் விளைநிலத்தில் தாழ்வாகச்செல்லும் உயா் அழுத்த மின்வயா்கள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

வாடிப்பட்டி அருகேயுள்ள திருவாலவாய நல்லூா் பகுதியில் முதல் போக விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விளை நிலங்களின் வழியே உயா் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச்செல்வதால் 30 ஏக்கா்களுக்கும் அதிகமான நிலங்களில் பாசனப்பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயி இளங்கோவன் கூறியது: நிலத்தின் வழியே மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொட்டு விடும் தூரத்தில் செல்கின்றன. இதனால் உழுவதற்காக டிராக்டா் உள்ளிட்ட இயந்திரங்களை வயலுக்குள் கொண்டு வர முடியவில்லை. தற்போது இதரபகுதிகளில் முதல் போக விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஆனால் இங்கு மின் கம்பி பிரச்னையால் நிலத்தை உழவு செய்யமுடியாமல் வெற்று நிலமாக வைத்துள்ளோம். மின் கம்பி தாழ்வாகச் செல்வதை சரிசெய்யும்படி மின் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபரீதங்கள் நடப்பதற்கு முன் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com