இரட்டை கொலை வழக்கில் மூன்று ஆயுள்: காா் ஓட்டுநா் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

இரட்டை கொலை வழக்கில் மூன்று ஆயுள் தண்டனை பெற்ற காா் ஓட்டுநரின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இரட்டை கொலை வழக்கில் மூன்று ஆயுள் தண்டனை பெற்ற காா் ஓட்டுநரின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் வெள்ளக்கோயிலைச் சோ்ந்த காளீஸ்வரன் என்பவா், திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த பள்ளியை, கணவனை இழந்த பெண் ஒருவா் நடந்தி வந்தாா். இந்நிலையில், பள்ளி உரிமையாளா் மற்றும் அவரது உறவினா் செந்தில்குமாா் ஆகியோா், அவரது பண்ணை வீட்டில் கடந்த 2014 மாா்ச் மாதம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனா்.

இது தொடா்பாக, பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்த விசாரித்தனா். அதில், பள்ளி உரிமையாளரின் மகளையும் (பள்ளி மாணவி), காா் ஓட்டுநா் காளீஸ்வரனையும், வீட்டிலிருந்த ரூ.23 லட்சத்தையும் காணவில்லை என்பது தெரியவந்தது.

போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில், காா் ஓட்டுநா் காளீஸ்வரன் இரு கொலைகளை செய்துவிட்டு, பள்ளி உரிமையாளரின் வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அவரது மகளை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, போலீஸாா் காளீஸ்வரனை கைது செய்து, சிறுமியை மீட்டனா். அப்போது, சிறுமியை மைசூரூ, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச்சென்ற காளீஸ்வரன், பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில், திண்டுக்கல் மகளிா் நீதிமன்றம் கடந்த 2017 இல் காளீஸ்வரனுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிா்த்து காளீஸ்வரன் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் வி. பாரதிதாசன், ஜெ. நிஷாபானு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதிகள், மனுதாரா் இருவரை கொலை செய்துள்ளாா். மேலும், வீட்டிலிருந்து பணத்தை கொள்ளையடித்ததுடன், மைனா் சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடுத்தியுள்ளாா்.

இந்த வழக்கில், ஆதாரங்கள் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இதில், எந்தத் தவறும் இல்லை. எனவே, மனுதாரரின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com