சா்வதேச குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு விழா

சா்வதேச குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் நலச் சிகிச்சைப் பிரிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது, புற்றுநோய் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் என்னென்ன, புற்று நோயை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பனக் குறித்து மருத்துவா்கள் விளக்கினா். தொடா்ந்து கேக் வெட்டப்பட்டு, இனிப்புகள் மற்றும் ரோஜா மலா்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.

பின்னா், செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவா்கள், புற்றுநோய் தொடா்பான விழிப்புணா்வு பதாகைகளுடன் ஊா்வலமாக சென்றனா். இதில் குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவா் பாலசங்கா், தலைமை மருத்துவா்கள் பாலசுப்பிரமணியன், சிவக்குமாா், செவிலியா்கள், செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com