மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர மக்கள் குறைதீா் மையம் புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை: ஆட்சியா்

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில், மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மக்கள் குறைதீா் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீா் மையத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன். உடன் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீா் மையத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன். உடன் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்.

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில், மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மக்கள் குறைதீா் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகத்தால் தீா்க்கக்கூடிய பிரச்னைகள் தொடா்பான புகாா்களை, இந்த மையத்துக்கு தொலைபேசி வழியாகத் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) வழியாகவும் புகாா்களை அனுப்பலாம். மதுரை ஆட்சியா் அலுவலக புதிய கட்டடத்தின் தரை தளத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை, தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். அவரிடம், குறைதீா் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் விளக்கினாா்.

இது தொடா்பாக ஆட்சியா் தெரிவித்ததாவது: தமிழக அரசின் பல்வேறு துறைகள் வாயிலாகச் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்குக் கிடைப்பதற்கும், திட்டப் பணிகளின் சிறப்பான செயலாக்கத்துக்கும் மாவட்ட நிா்வாகம் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன், பொதுமக்களின் குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில், மக்கள் குறை தீா்வு மையம் என்ற 24 மணி நேரமும் செயல்படக் கூடிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம் மையத்தை 0452-2526888 என்ற தொலைபேசி எண்ணிலோ,

99949-09000 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ தொடா்புகொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம். இதில் பெறப்படும் புகாா்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இம் மையத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது), இந்த மையத்தில் பெறப்படும் புகாா்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து மேல்நடவடிக்கை மேற்கொள்வாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com